chiranjeevi vijayasanthi
chiranjeevi vijayasanthi

மோகன்லால் நடித்த லூசிபர் படம் பாக்ஸ் ஆபீஸ் பெரிய அளவில் கலெக்சன் மழை பொழிந்தது. இந்த சூப்பர் ஹிட் படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்வதற்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கப் போகிறார். சாஹோ இயக்குனர் சுஜித் இந்த படத்திற்கு டைரக்சன் செய்யப் போகிறார்.

லூசிபர் ரீமேக் குறித்து ஏற்கனவே ரசிகர்களில் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் அன்றைய அழகு நடிகை சுகாசினி முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

புதிதாக சிரஞ்சீவியின் இந்த பிராஜக்ட் தொடர்புடைய மற்றுமொரு உற்சாகமான செய்தி பிலிம் நகரில் சுற்றி வருகிறது. 90களில் ஹிட் ஜோடியாக விளங்கிய சிரஞ்சீவி விஜயசாந்தி இந்தப்படத்தில் மற்றுமொருமுறை சில்வர் ஸ்கிரீன் மீது ஒளிர போகிறார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது.

சுகாசினி விஜயசாந்தி இருவரையும் லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் தேர்ந்தெடுத்துள்ள தாக வரும் செய்திகளின் மீது இன்னும் அதிகாரபூர்வமான வெளியீடு வரவில்லை.

தற்போது தெலுங்கு நேட்டிவிட்டிக்கு தகுந்ததாக ஸ்கிரிப்டை தயார் செய்யும் வேலையில் உள்ளார் சுஜித். மறுபுறம் சிரஞ்சீவி கொரடால சிவா எடுக்கும் ஆச்சாரியா படத்தை பூர்த்தி செய்யும் வேலையில் உள்ளார். இந்த திரைப்படம் முடிவடைந்தால் லூசிஃபர் படம் செட்டிற்கு வருவது நிச்சயமாகும்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending