யோகா பிதாமகர் பாலய்யா!

இந்தியா சற்றுமுன் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
yoga chittyala balaiah
yoga chittyala balaiah

95 வயதில் 30 ஆண்டுகளாக யோகப்பயிற்சி செய்வதோடு இந்த ஞானத்தை பிறருக்கும் அளித்து வருகிறார். கழியில்லாத நிமிர்ந்த நடை, தளர்வில்லாத ஸ்கூட்டர் டிரைவிங், கண்ணாடியில்லாத கண்பார்வை, கம்பவுண்டராக வேலை பார்த்தும் ஒரு மருத்து மாத்திரை சாப்பிடாத உடல்…

இன்றைக்கும் பரிபூரண ஆரோக்கியத்தோடு தானே தன் வேலைகளை செய்து கொள்கிறார். உற்சாகம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். ஆச்சரியப்படவைக்கும் சிட்யால பாலையா.

தெலங்காணாவில்மெட்பல்லி களாநகரைச் சேர்ந்த பாலையா படிக்கும்போதே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அங்கத்தினராக இருந்தார். அப்பொழுதே சிலம்பம், நான்சாக் போன்ற பிரிவுகளில் பயிற்சி பெற்றார். அதன்பின் உள்ளூர் அரசு மருத்துவமனையில் காம்பவுண்டராக சேர்ந்து பணிபுரிந்து பதவி ஓய்வு பெற்றார்.

yoga chittyala balaiah
yoga chittyala balaiah

அதன் பின் யோகாசனங்களின் மீது முழுமையாக ஈடுபட்டார். நிஜாமாபாத் மாவட்டம் மார்தாடடைச் சேர்ந்த யோகாநந்த சுவாமியிடம் சீடராக சேர்ந்து பெங்களூரில் உள்ள விவேகானந்தா யோகா துணை அமைப்பில் யோகாப்பியாசம் செய்து சர்டிபிகேட் பெற்றார்.

பிரபலமான யோகாசாரிணி வனஜாரெட்டியோடு சேர்ந்து ஹைதராபாத், கரீம்நகர் மற்றும் பல இடங்களில் யோகா இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தினார். நீண்ட காலம் சாதனை செய்தால் மட்டுமே சாதிக்கக்கூடிய பல ஆசனங்களை இவர் இந்த வயசிலும் எளிமையாக செய்கிறார்.

yoga chittyala balaiah
yoga chittyala balaiah

30 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடாமல் தினமும் இரவு இரண்டு மணியிலிருந்து காலை 4 மணி வரை 160க்கும் மேலான ஆசனங்களை செய்து வருகிறார். தினமும் ஆசனங்கள் செய்வது, சரியான உணவு நியமங்களை கடைப்பிடிப்பதால் எந்தவித ஆரோக்கிய பிரச்சனைகளும் அவரை அண்டியதில்லை. எந்தவித மருந்து ஊசி பயன்படுத்துவதில்லை. கிட்டப்பார்வை, எட்டப்பார்வை என்ற பிரச்சனை இல்லவே இல்லை. ஆசனங்களோடு கூட கண் தொடர்பான பயிற்சிகள் கூட தினமும் செய்து வருவதால் பரிபூரண ஆரோக்கியத்தோடு இருப்பதாக கூறுகிறார்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

அதுமட்டுமல்ல உற்சாகம் உள்ளவர்களுக்கு மேட்பல்லி நகரிலுள்ள விவேகானந்தா கேந்திரத்தில் ஆசனங்கள் மீது இலவச பயிற்சி அளிக்கிறார்.

பிசியோதெரபி, சுஜக் தெரபியிலும் நிபுணராக இருப்பதோடு கூட ஆல் இந்தியா பிஸியோதெரபி கல்லூரியிலிருந்து சர்டிபிகேட் கூட பெற்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.