வாவ்..! விரும்பி சாப்பிடுவாங்க இந்த புலாவ்!

Published:

cemiya pulav

சேமியா புலவு

தேவையானவை:
சேமியா – ஒரு கப்,
வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பீன்ஸ் – 5,
பச்சைப்பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் – 2.

செய்முறை:
சேமியாவை வறுத்துக் கொள்ளவும். காய்கறிகளை வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வேக வைத்த காய்கறிகளுடன் உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த சேமியா சேர்த்து மெதுவாகக் கிளறி, வேக விடவும். வெந்து விட்டதற்கு அறிகுறியாக வாசம் வந்ததும் நெய் விட்டு கிளறி… நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img