ஆரோக்கிய உணவு: சோள ரவை கேசரி கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kozhukattai

சோள ரவை கேசரி கொழுக்கட்டை
தேவையானவை:
களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – ஒரு கப்,
சோள ரவை – அரை கப்,
ஆரஞ்சு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு – 5,
சர்க்கரை – ஒரு கப்
நல்லெண்ணெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை:
சோள ரவையை வெறும் கடாயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, கொதி வந்ததும் சோள ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறி, ஆரஞ்சு ஃபுட் கலர், நெய் சேர்த்து, சர்க்கரையையும் சேர்த்துக் கிளறி பூரணம் ரெடி செய்யவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பை மேலே தூவவும்.

இரண்டு கப் நீருடன் நல்லெண்ணெய், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி மாவை சேர்த்து கட்டிதட்டாதவாறு, கைவிடாமல் கிளறி இறக்கவும். மாவை சொப்புகளாக செய்து, உள்ளே கேசரி பூரணத்தை வைத்து மூடி, 7 – 10 நிமிடம் ஆவியில் வேகவிடவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.