
திருப்புவனம் பேரூராட்சியில் டெண்டர் வைக்காமலேயே ஆளுங்கட்சிக்கு சாதகமாக ரூ.2 கோடிக்கு பணி ஒதுக்கீடு. திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் டெண்டர் வைக்காமலேயே ரூ.2 கோடிக்கு பணிகள் நடந்துள்ளதாக திமுக கூட்டணி சார்பில் திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன தலைமையில் நடைபெற்றது.
திருப்புவனம் பேரூராட்சி எதிரரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பேரூராட்சி நடைபெற்ற ஊழல் குறித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் கொரோனாவால் 144 தடைகள் இருக்கும் போதும் டெண்டர் விடாமல் முறைகேடு நடந்து உள்ளது.
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜாவிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை என்றும் மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், திருப்புவனத்தில் புல எண் 16/14 என்ற இடத்தில் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டுள்ளது. இது போன்று பல பணிகளுக்கு ஆளும் கட்சியினருக்கு சாதகமாக டெண்டர் விடாமல் பணி தரமின்றி நடந்துள்ளது.
பேரூராட்சிக்கு பொறியாளர் இல்லாத நிலையில் அவசர பணிகளுக்கு ரசீது முறையில் ரூ.10 ஆயிரத்திற்குள் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையில் மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான பணிகளை டெண்டர் விடாமல் ரசீது முறையிலேயே மேற்கொண்டுள்ளனர்.
டெண்டர் விடாமல் பணம் எடுப்பது சட்ட விதிகளுக்கு முரணானது. இது உள்ளாட்சி விதிகளுக்கு முரணானது. இதன்மூலம் மக்கள் பணத்தை விரையமாக்கி முறைகேடு நடைபெறுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை