கந்துவட்டி கொடுமை! நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு- பரபரப்பு!

Published:

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு தீக்குளித்தனர், இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள , காசிதர்மம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் மதுசரண்யா, அட்சய பரணிகா ஆகிய இரண்டு குழந்தைகள், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை தீக்குளித்தனர்.
அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கடன் வாங்கியதாகவும், அவர் இந்த கடனை திரும்ப கேட்டு மிரட்டி அதிக வட்டி கேட்டு வருவதாகவும் போலீசாரிடம் சென்றுள்ளனர்.
போலீசாரும் கடன் கொடுத்தவருக்கே ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதனால் கந்துவட்டி கொடுமை குறித்து கலெக்டர் அலுவலகத்தில், 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இசக்கிமுத்து புகார் கூறியுள்ளார்.
இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்தற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கந்துவட்டி கொடுமை காரணமாக அவர்கள் தீக்குளித்தது தெரியவந்தது. 
கலெக்டர் ஆபிசில் தீக்குளித்த நால்வருக்கும் 75% தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பிழைப்பது கடினம்.
இந்த சம்பவம் குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு தீக்குளித்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img