அறந்தாங்கி அருகே குளத்தில் கிடந்த சிலை மீட்பு

சற்றுமுன்

அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் கோயில் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிலையை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் அறந்தாங்கி போலீசார் மீட்டு விசாரணை நடத்திவருகிறார்கள்.
அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமம் உள்ளது இந்த கிராமத்தில்  பிள்ளையார்கோயிலும் ஒரு குளமும் உள்ளது இந்த குளத்தில் கடந்த மாதம் ஒரு அரையடி உயரமுள்ள அம்மன் சிலையை கிராம மக்கள்எடுத்து அருகில் வைத்துவழிபாடு செய்து வந்தனர்.இந்நிலையில் பொதுமக்கள் தரப்பில் திருச்சி சிலை கடத்தல்தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.அதன் அடிப்படையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை நடத்தி அந்தசிலையை மீட்டு அறந்தாங்கி போலீசில் ஒப்படைத்தனர் இதுகுறித்து அறந்தாங்கி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் மீட்கப்பட்ட சிலையை உரிய விசாரணைக்கு பின் வருவாய்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.