To Read it in other Indian languages…

Home சற்றுமுன் வழக்கம்போல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்! தீர்மானம் நிறைவேற்றம்!

வழக்கம்போல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்! தீர்மானம் நிறைவேற்றம்!

madurai jallikattu meeting - Dhinasari Tamil

கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டு வழக்கம் போல ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கோரி, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

தமிழர் திருநாளை விடுமுறை தினமாக அறிவித்த பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் 14 -வது பொதுக்குழுக் கூட்டம் மதுரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

madurai jallikattu meeting1 - Dhinasari Tamil

ஜல்லிக்கட்டு பேரவை மாநிலதலைவர் ராஜசேகரன் தலைமை வகித்த இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர் இதில், தமிழர் திருநாளை விடுமுறை தினமாக அறிவித்த பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தும்…

திருப்பூர் ,கோவை உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு நிரந்தரமாக இடம் வழங்குதல், மற்றும் கொரோணா ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் 2021 ம் ஆண்டு வழக்கம்போல் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்டன .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.