சென்னையில் 30 கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கம்

சற்றுமுன் சென்னை

சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி சீசன் டிக்கெட் உள்ளவர்கள் தவிர்த்து, புறநகர் ரயில்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் சென்றதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

6 ஆம் தேதி 2 லட்சத்து இரண்டாயிரம் பேரும், 7 ஆம் தேதி ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேரும் பயணித்துள்ளனர்.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சென்னை கடற்கரை வேளச்சேரி இரு மார்க்கத்தில் 8 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கடற்கரை  அரக்கோணம், கடற்கரை ஆவடி வழித்தடங்களில் தலா 2 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் 9 ரயில்கள் சிறப்பு ரயில்கள் செல்ல உள்ளன.

இதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு கூடுதலாக 9 ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.