விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி! 17 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
vankodumai
vankodumai

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சங்கர் ரைஸ்மில் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன், பெயிண்டராக இருந்து வருகிறார்.

இச்சிறுவன் நேரு நகரைச் சேர்ந்த ஐந்து வயதான ஒரு சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அச்சிறுமியை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதாமணி, 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அச்சிறுவனை ஒப்படைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.