ராஜபாளையம் அருகே சிலை உடைப்பு! வேறு சிலை நிறுவி அமைதி ஏற்படுத்திய போலீசார்!

Published:

tnpolice
tnpolice

இராஜபாளையம் அருகே புத்தூர் பகுதியில் தேவர் சிலை பகுதியில் உள்ள முருகன் சிலையை உடைத்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை… காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து முருகன் சிலையை உடனே வைத்து சிசிடி கேமரா பொருத்தியதால் பொதுமக்கள் அமைதி!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் தேவர் சிலை உள்ளது. தேவர் உள்ள கோபுரம் அருகே முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது இந்த முருகன் சிலையை நள்ளிரவில் மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியதில் தலைப்பகுதி உடைக்கப்பட்டது

இதை அதிகாலை பார்த்த பொதுமக்கள் காவல்துறையிடம குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த
இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான போலீசார் மற்றும் இராஜபாளையம் வட்டாட்சியர் ஸ்ரீதர் துரிதமாக நடவடிக்கை எடுத்து உடைக்கப்பட்ட சிலைக்குப் பதிலாக வேறு சிலை வைத்து 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது

மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு விரைந்து செயல்பட்டு வருகின்றனர் … காவல்துறையின் துரித நடவடிக்கையால் பெரிய பிரச்சனை தவிர்க்கப்பட்டது

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

பொதுமக்கள் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் சூழ்நிலை நிலவியது

Related articles

Recent articles

spot_img