தாய் குளிக்கும் வீடியோவைக் காட்டி மிரட்டியே மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
bathroom video - 2026

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த குடியாத்தம் பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

அந்த மனுவில், இந்த இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணும், அவரது தாயாரும் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞர் அதனை வீடியோ எடுத்து இந்த இளம்பெண்ணிடம் காட்டி மிரட்டி உள்ளார்.

அப்போது தான் கூறுவதை செய்யவில்லை என்றால் இந்த இளம் பெண்ணின் தாயார் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார்.

vankodumai 1 - 2026

இதனால் பயத்தில் அந்த பெண் வேலூர் ஓட்டேரி பகுதியில் அந்த இளைஞரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது ஒரு அறையில் இளம் பெண்ணை அடைத்து வைத்து அந்த இளைஞர் இரண்டு நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அதை செல்போனில் படம் பிடித்த அந்த இளைஞர் அந்த பெண்ணை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்! 

மேலும் மாதந்தோறும் இந்த பெண்ணிடமிருந்து 10 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் காவல்துறையினர் அந்த இளைஞரை பிடித்து கடந்த நவம்பர் மாதம் சிறையில் அடைத்து விட்டனர்.

ஆனால் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த அந்த இளைஞர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், தான் பணிபுரிந்து வரும் மருத்துவமனைக்கு வந்து தன்னை தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞர் அந்த இளம்பெண்ணின் குடும்பத்திலுள்ள யாரையாவது வெட்டிக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதால் அந்த இளைஞரிடம் இருந்து தன்னையும், தனது குடும்பத்தினரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அந்த இளம்பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.