கொரோனா: அடுத்தடுத்த உத்தரவினைப் பிறப்பித்த தமிழக அரசு!

சற்றுமுன் தமிழகம்
corono test 1
corono test 1

நேற்றைய தினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விரிவான ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஒவ்வொன்றாக தமிழக அரசின் உத்தரவாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலாகக் கட்டுப்படுத்தும் விதமாக பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று, சற்று முன் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு உண்டான பணிகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

கொரோனா சிகிச்சை மையங்களில் போதுமான அளவிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தவும், முக்கியமாக சென்னையில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தடுப்புசி செலுத்தும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் மூன்று நபர்களுக்கு ஒரு பகுதியில் கொரோனா தோற்று கண்டறியப்பட்டால், அந்த பகுதி நோய்த்தொற்று கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.