ரேஷன் ஊழியரின் மேல் இடித்து 5 லட்சம் அபேஸ் செய்த பெண்!

Published:

money 1
money 1

பெண் ஒருவர் தானாக வந்து இடித்து விட்டு குடிபோதையில் இருந்தவரிடம் இருந்து 5 லட்சம் பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44 வயதான பாஸ்கரன் மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூரை சொந்த ஊராக கொண்ட இவர் கோயம்பேடு சாஸ்திரி நகரில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஜனவரி 7ம் தேதி இரவு பணி முடித்து, சக ஊழியர் சக்திவேலுடன் கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, ரூபாய் ₹8 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக கொடுப்பதற்காக அரசு பணத்தை தனது கைப்பையில் வைத்திருந்தார்.

இந்நிலையில், பாஸ்கரன் வீட்டின் அருகே நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அவர் மீது இடித்துள்ளார் பின் அங்கு வந்த ஆட்டோ டிரைவர் என் மனைவியை ஏன் இடித்தாய் என தகராறு செய்யும் போது பாஸ்கரனின் கைப்பையில் பணம் இருப்பதை தெரிந்துகொண்ட ஆட்டோ டிரைவரும், அந்த பெண்ணும் பாஸ்கரனை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்றதை அடுத்து அவரிடமிருந்த 8 லட்சத்தில் 5 லட்சத்து 15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினர்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இதனால் பதறி போன பாஸ்கரன் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் தாமாக வந்து இடித்து விட்டு அதற்காக 5 லட்சம் புடுங்கியதாக கணவன் மனைவி மீது புகார் அளித்ததை அடுத்து போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்து தேனாம்பேட்டையை சேர்ந்த 31 வயதான சர்க்கரை முகம்மது, 30 வயதான அவரது கள்ளக்காதலி அமுதா ஆகியோர் பணம் பறித்தது தெரியாவந்ததை அடுத்து முகமதுவை போலீசார் நேற்று கைது செய்து அமுதாவை தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img