manimegalai - 2026

கரூர் மாவட்டத்தில் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக தட்டிக் கேட்ட பெண்ணை அடித்து துன்புறுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை.

கரூர் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ராம்பிரகாஷ் என்பவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மணிமேகலையை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் ராம்பிரகாஷ் தனது அண்ணன் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது இதில் ஆத்திரமடைந்த மனைவி தனது தந்தையின் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்தி தன்னுடன் அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார்.

ஆனால் தன் கணவன் திருமணத்தை மீறிய உறவு மீண்டும் தொடர்ந்ததால் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தனது மனைவியை அடித்துவிட்டு வீட்டிலிருந்து வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவருடைய மனைவி மின்விசிறியில் தன்னுடைய துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இது குறித்து மணிமேகலையின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மணிமேகலையின் உடலை பார்வையிட்ட பிறகு அவருடைய உறவினர்களை சந்தித்தார்.

அப்போது அவருடைய உறவினர்கள் தற்கொலைக்கு காரணமான ராம்பிரகாஷ் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending