மாணவியை 3 வது திருமணம் செய்ய கடத்திய உடற்கல்வி ஆசிரியர்!

Published:

school - 2026

மத்தூர் அருகே, பள்ளி மாணவியை கடத்தி, நான்காவதாக திருமணம் செய்ய முயன்ற, உடற்கல்வி ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அருகே, மேல்செங்கம் அடுத்த, புதியகுயிலத்தை சேர்ந்தவர் சரண்ராஜ், 31; நாகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர். ஏற்கனவே மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

அதே பகுதியில் தற்போது வசிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசுப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவரை, சரண்ராஜ் திருமணம் செய்ய எண்ணினார்.

மத்தூரில், கடந்த, 9ல், வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி, திருமணம் செய்வதற்காக கடத்தி சென்றார். மாணவியின் சித்தி புகாரின்படி, மத்தூர் போலீசார் சரண்ராஜை கைது செய்தனர்.

Related articles

Recent articles

spot_img