அதிர்ச்சி! குப்பையில் வீசி சென்ற இரட்டை குழந்தைகள்!

சற்றுமுன்
baby 1
baby 1

பிறந்த இரட்டை குழந்தைகளை வீசிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் சிமெண்ட் ஆலை ஒன்று, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆதனக்குறிச்சி கிராமத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த ஆலையின் சுரங்க பகுதியில் குறை பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளின்(ஆண், பெண்) சடலம் கிடந்துள்ளதை பார்த்து அப்பகுதி கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், அப்பகுதி கிராம மக்களில் சிலர் சேர்ந்து அந்த குழந்தைகளை அவர்களே அதே இடத்தில் குழிதோண்டி புதைத்து விட்டு, அதை போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து தளவாய் போலீசாரிடம் அக்கிராம நிர்வாக அலுவலர், புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்ற போலீசார், செந்துறை வட்டாச்சியர் குமரையா முன்னிலையில், புதைக்கப்பட்ட சிசுவின் உடலை தோண்டி எடுத்து, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

இரட்டை சிசுக்களின் உடலை இரக்கமின்றி ரகசியமாக யார் வீசிச் சென்றது, இது திருமணத்தை மீறிய உறவு காரணமாக உருவான குழந்தையா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.