வீட்டில் அடிக்கடி காணாமல் போன பணம்! ஆன்லைன் விளையாட்டால் 12 லட்சம் மோசடி!

சற்றுமுன் தமிழகம்
cell phone
cell phone

இளைஞர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவனிடம் இருந்து 12 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் ராம்விலாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராம்விலாஸ் தனது வீட்டு லாக்கரில் வைத்திருந்த பணம் அடிக்கடி காணாமல் போவதை கண்டு அதிர்ச்சி அடைந்து ரகசியமாக வீட்டில் இருப்பவர்களை கண்காணித்து வந்துள்ளார்.

அப்போதுதான் 13 வயதான தனது 8-ஆம் வகுப்பு படிக்கும் மகன் பணத்தை எடுத்தது ராம் விலாஸுக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ராம்விலாஸ் தனது மகனிடம் விசாரித்தபோது ஆன்லைன் விளையாட்டில் இளைஞர் ஒருவரிடம் தான் பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நொளபூர் காவல் நிலையத்தில் ராம்விலாஸ் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சுகுமார் என்பவர் ஆன்லைன் விளையாட்டின் மூலம் சிறுவனை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும் சுமார் 12 லட்சம் ரூபாயை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அந்த சிறுவன் கொடுத்து ஏமாந்துள்ளான். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.