தமிழக கோவில் சிலைகளை, ‘ஆன்லைன்’ வாயிலாக, முப்பரிமாண வடிவில் பார்க்க, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ‘டிஜிட்டல்’ அருங்காட்சியகத்தை உருவாக்கி உள்ளனர்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கோவில்களில் திருடுபோன மற்றும்வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருகின்றனர்.
இதுவரை பஞ்சலோக சுவாமி சிலைகள் 36; கற்சிலைகள் 265; மரச்சிலைகள் 73 என, 374 சிலைகளை மீட்டுள்ளனர்.வழக்கு விசாரணை நடப்பதால், நீதிமன்ற சொத்தாக இந்த சிலைகள், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடமே ஒப்படைக்கப்பட்டு உள்ளது. போலீசார் இந்த சிலைகளை, சென்னை திருவொற்றியூர், எழும்பூர்அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாத்து வருகின்றனர்.
இந்த சிலைகளை, பொது மக்கள் ஆன்லைன் வாயிலாக, முப்பரிமாண வடிவில் பார்க்கும் வகையில், சென்னை, ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ‘டிஜிட்டல்’அருங்காட்சியத்தை உருவாக்கியுள்ளனர்.பொதுமக்கள், www.tnidols.com என்ற இணையதளம் வாயிலாக பார்க்கலாம்.





