கொரோனா: மே 4 திருமணம்.. முந்தைய நாள் மரணித்த மணமகன்!

இந்தியா சற்றுமுன்
register-marriage
Pregister-marriage

கொரானா பாதித்தவருக்கு நடக்க இருந்த திருமணம் அவர் கொரானாவால் உயிரிழநததால் நிறுத்தப்பட்டது

கர்நாடக மாநிலம், கார்வார் மாவட்டம் நந்தனகட்டா கிராமத்தில் 32 வயதான ரோசன் பசவலகர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். இவர், மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ரோசனுக்கு32 வயதாகி விட்டதால் அவருக்கு உடனே ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்ய அவரின் உறவினர்கள் முடிவெடுத்தனர் .

அதனால் , அதே பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணோடு திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் அந்த இளம்பெண்ணுக்கும், ரோசனுக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

அப்போது ரோசணின் திருமணத்தை மே 4-ந்தேதி நடத்த இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மணமகள் வீட்டார் செய்து வந்திருந்தனர்.

அதனால் தன்னுடைய திருமணத்திற்காக விடுமுறை எடுத்து கொண்டு புனேயில் இருந்து ரோசன் கார்வாருக்கு வந்திருந்தாா். அதன் பிறகு அவர் மணப்பெண்ணுடன் அடிக்கடி போனிலும் பேசி வந்தார் .

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரோசனுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

அதனால் கல்யாண வீட்டார் அதிச்சியடைந்தனர். ஆனாலும் அந்த மணப்பெண் அவரை கல்யாணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்தார் அதனால் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றது .

இதற்கிடையே கல்யாணத்திற்கு முதல்நாள் அந்த மணமகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனால் கல்யாணம் நிறுத்தப்பட்டது. அதனால் மணமகளும் அந்த கிராமத்தினரும் சோகமானார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.