யானை வழித்தடத்தில் நடிகர் சத்யராஜ் சகோதரி வீடு? காட்டு யானைகள் சுற்றி வந்த வீடியோ வைரல்!

அடடே... அப்படியா? கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
elephant in kovai
elephant in kovai

நடிகர் சத்யராஜின் சகோதரி வீட்டை காட்டு யானைகள் முற்றுகையிட்டு சுற்றிச் சுற்றி வந்ததாகவும், காட்டு யானைகள் குட்டிகளுடன் வந்து தண்ணீர் தொட்டியில் நீர் அருந்தியதாகவும் ஒரு வீடியோ சமூகத் தளங்களில் வைரலானது.

நடிகர் சத்யராஜின் சகோதரி வீட்டுக்கு காட்டுயானைகள் வந்து முற்றுகையிட்டதாகவும், யானைகளின் வழித்தடத்தில் அமைந்துள்ள அந்தப் பகுதிகளில் தண்ணீர் தேடி யானைகள் வருவது வழக்கம் என்றும் கூறப் படுகிறது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடிகர் சத்யராஜின் சகோதரி வீட்டை பதினைந்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முற்றுகையிட்டன. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக அடிக்கடி காட்டு யானைகள் அந்த வழித்தடத்தில் வருவது வழக்கம்.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்த காட்டு யானைகள் அங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் நீரை அருந்தியதோடு அதில் விளையாடின.

வீட்டையே சுற்றிச் சுற்றி வந்த யானைகள் பின்னர் தாங்கள் வந்த வழியே திரும்பின. இந்நிலையில் யானைகளுக்கு பயந்த அந்த வீட்டில் உள்ளவர்கள் மாடியில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் எடுத்த இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூகத் தளங்களில் பரவி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.