அப்பாடா… அருமையான வசதி இது! திருப்பதி பெருமாள் தரிசன ஆர்ஜித சேவையில்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tirumala-tirupathi-perumal

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவையில் பலரும் மனம் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு புதிய வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப் படுத்தியுள்ளது. அதாவது, தரிசனத்துக்கான தேதியை மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப் படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளதை பலரும் வரவேற்றிருக்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவையில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு தரிசன தேதியை மாற்றிக்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஆர்ஜித சேவைக்கான ஆன்லைன் டிக்கெட் கடந்த ஏப்ரல் 21 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டு இருந்தது. இவ்வாறு முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சுவாமி தரிசனத்திற்கு தங்களது டிக்கெட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என திருப்பதி – திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.