
நடிகர் அஜித் ஹைதராபாத்தில் நடைபெற்ற பைக் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. அதையடுத்து அஜித் ரஷ்யாவில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தற்போது அஜித் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ள பிஎம்டபிள்யூ பைக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் தான் நடிகர் நவ்தீப் அஜித்தைச் சந்தித்துள்ளார். அதுகுறித்து தனது சமூக சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் “இந்த மனிதர் ஒரு தூய்மையான அன்பு.

அவருடைய “ஹாய்” என்று சொல்லும் தொனி, நாங்கள் சந்தித்ததில் இருந்து பல வருடங்கள் ஆகிவிட்டனவா என்று வியக்க வைக்கிறது. அவருடைய எளிமையும், நுண்ணறிவுள்ள குணமும் கிடைத்தால் அதுவே ஆனந்தம்! உண்மையிலேயே அற்புதமான மனிதர். அதனால் தான் அவர் “தல” !!! என்று தெரிவித்திருந்தார்.

வலிமை திரைப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்து மீண்டும் எச்.வினோத் உடன் அஜித் கூட்டணி அமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.