சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு! மதபோதகரை கண்டித்து கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

Published:

Demonstration - 2026

தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் மற்றும் மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தேவாலய மதபோதகரை எதிர்த்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் பகுதியில் பெரிய நாயகி மாதா ஆலயம் இருந்து வருகிறது. அம்மாதா ஆலயத்தில் அப்பகுதி கிறிஸ்தவர்களும் வெளியூர் கிறிஸ்தவர்களும் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

அத்தேவாலயத்திற்கு வழிபாடு செய்ய வரும் பெண்களிடம் போதகர் பாலியல் ரீதியில் பேசி தொந்தரவு அளிப்பதாகவும், சாதிய ரீதியில் மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் மதபோதகரை எதிர்த்து அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாதா தேவாலயத்தில் மதபோதகரின் இத்தகைய கீழ்த்தரமான செயலை கண்டு தமிழகத்தில் பிற பகுதியிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img