forest - 2026

யானையும், புலியும் நேருக்கு நேர் நடுவில் மாட்டிய வாகனம்! வைரல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
forest - 2026

வனத்துறை அதிகாரி சுதா ராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கர்நாடகாவில் அமைந்துள்ள புலிகள் காப்பகம் ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் குளம் ஒன்றில் யானை குளித்துக் கொண்டிருக்கிறது.

நடுவில் சவாரி செய்வதற்கான பாதை ஒன்று உள்ளது. அதற்கு அந்த பக்கத்தில் புலி ஒன்று நடந்து வருகிறது.

ஒரு புலியும் யானையும் ஒரே இடத்தில் சந்தித்தால்? அப்போது நீங்கள் சவாரி செய்யும் வாகனத்தில் அமர்ந்திருந்தால்? அந்த வனவிலங்குகளுக்கு எத்தகைய தொந்தரவையும் அளிக்காமல் வண்டியை பின்னோக்கி எடுத்துச் செல்வதே சிறந்தது.

சுதா ராமன் பதிவிட்டுள்ள வீடியோவிலும் அது தான் குறிப்பிடப்பட்டுள்ளது. சவாரி மிகவும் அட்வென்ச்சர் நிறைந்தது தான் ஆனால் இது போன்ற ஒரு சூழலை எதிர்கொள்ளும் நிலையில் சவாரி வாகனங்கள் மிகவும் பாதுகாப்பான தொலைவில் விலகி இருப்பதே நல்லது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.