dog deer - 2026

வெள்ளத்தில் தத்தளித்த மான்க்குட்டி! காப்பாற்றி கரை சேர்த்த நாய்! வைரல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
dog deer - 2026

தண்ணீரில் சிக்கி தத்தளித்த மான் குட்டியை நாய் ஒன்று காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீரில் மூழ்கும் ஒருவரை மனிதர்கள் பலரும் தங்களது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி நாய் ஒன்று தனது உயிரை பணயம் வைத்து மான் குட்டியை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் மான் குட்டி ஒன்று வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளது. இதைப் பார்த்த வளர்ப்பு நாய் வேகமாக அந்த மான் குட்டியை காப்பாற்ற ஓடியுள்ளது.

பின் லாவகமாக தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு வருவதுபோல் அந்த மான் குட்டியை லாவகமாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தது.

இதனை அடுத்து கரையில் இருந்த தனது உரிமையாளரிடம் அந்த மான் குட்டியை நாய் ஒப்படைத்தது. மீட்ட அந்த மான் குட்டியை வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீரில் தத்தளித்த மான் குட்டியை வளர்ப்பு நாய் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி நெட்டிசன்களின் லைக்ஸை பெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.