மூளை ஆப்ரேஷன் ஆன மகளுக்காக தந்தை செய்த நெகிழ்ச்சி சம்பவம்! வைரல்!

Published:

dad daughter - 2026

ஒவ்வொரு பெண்ணிற்கும் பிடித்த முதல் ஆண் அப்பா தான். தந்தைகள் தங்கள் மகள்களுடன் பகிர்ந்து கொள்ளும் பிணைப்பை அளவிட முடியாது

தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாச பிணைப்பை சித்தரிக்கும் புகைப்படம் இணையவாசிகளின் இதயத்தை வென்று வைத்துள்ளது.

வைரலான புகைப்படத்தில், தந்தையும் மகளும் பரஸ்பரம் தலையை தொட்டுக் கொண்டுள்ள நிலையில் காணப்படுகின்றனர்.

இருவரின் தலையும் ஒரே விதமாக தோற்றம் அளிக்கிறது. மூளை அறுவை சிகிச்சையின் காரணமாக சிறுமியின் தலை மொட்டையடிக்கப்பட்ட நிலையில், தந்தை அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் அதே போன்ல் தோன்றும் வகையில் தலையை மொட்டையடித்து கொண்டுள்ளார். தலையிலும் தையல் போட்டது போல் முடி வெட்டப்பட்டுள்ளது.

சிறு குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவளுடைய அப்பா தனது பாச பிணைப்பை வெளிப்படுத்தும் விதம் என்னை அழ வைத்து விட்டது,” என்று புகைப்படத்தில் தலைப்பிடப்பட்டு ஒரு பயனர் பகிர்ந்துள்ளார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த புகைப்படம் 8,000க்கும் மேற்பட்ட லைக்குகளையும், 1,000க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.

மகளின் மீதான தந்தையின் பாசத்தை கண்டு, தங்கள் மனம் உருகுவதாக, நெட்டிசன்கள் தெரிவித்தனர். அவருக்கு ‘இந்த ஆண்டின் சிறந்த அப்பா’ விருதை வழங்க பலர் விரும்பினர்.

ஒரு பயனர், “இது ஒரு தந்தையின் அன்பு” என பதிவிட்டார். இன்னொருவர் ” இந்த தந்தைக்கு தன் குழந்தை மீதுள்ள அன்புக்கு ஈடாக வேறெதுவும் இல்லை.” என பதிவிட்டுள்ளார்

மற்றொரு பயனர், “அது உங்கள் மனதை உருக்கவில்லை என்றால், நீங்கள் மனிதர் அல்ல.” மற்றொருவர், “ஆனால் அந்த ஆண்டின் சிறந்த தந்தை விருது இவருக்கு தான் கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img