snake 2 - 2026

பாம்பை தொட்டு மகிழும் பாலகர்கள்! வைரல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
snake 2 - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பாம்பை பார்த்தால் பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள். பாம்புகள் பலசாலிகளையும் பதற வைக்கும். அதுவும் அது அனகோண்டா, மலைப்பாம்பு வகைகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.

ஆனால், குழந்தைகளுக்கு பயம் என்றால் என்ன என்றே தெரியாது. அவர்களுக்கு பாம்புகளும் பொம்மைகள் போலத்தான். இவர்கள் அவற்றுடன் விளையாடவும் தயாராகிவிடுகின்றனர். ஆனால், சில சமயம் இது ஆபத்தாக முடியலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் சில குழந்தைகள் பெரிய, ஆபத்தான பாம்புடன் விளையாடுவதைக் காண முடிகின்றது.

இருப்பினும், இந்த பாம்பு மலைப்பாம்பா அல்லது அனகோண்டாவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் சில பயனர்கள் இது ஒரு மலைப்பாம்பு என்று கூறுகின்றனர்.

வீடியோ-வில் காணப்படும் பாம்பு அனகோண்டாவாக இருந்தாலும் சரி, மலைப்பாம்பாக இருந்தாலும் சரி, இரண்டுமே ஆபத்தானவைதான். வீடியோவில் குழந்தைகள் மலைப்பாம்புடன் விளையாடுவதை காண்கிறோம்.

அவர்களிடம் அச்சம் என்ற உணர்வையே காண முடியவில்லை. ஒரு பொம்மையுடன் விளையாடுவதை போல, இவர்கள் யானையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏராளமான குழந்தைகள் பாம்பை சூழ்ந்துகொண்டு அதை தொட்டுப்பார்த்து, ஆசையுடன் தடவிக் கொடுக்கிறார்கள்.

இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் ஆச்சரியமான இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் பகிரப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ஐந்து லட்சம் முறை இது பார்க்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, பயனர்கள் இந்த பாம்பிலிருந்து விலகி இருக்குமாறு குழந்தைகளை அறிவுறுத்துகிறார்கள்.

அது மட்டுமின்றி, இந்த பாம்பு தன்னுடைய இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கும், பாம்பால் மனிதர்களுக்கும், மனிதர்களால் பாம்புக்கும் எந்த ஆபத்தும் வராமல் இருக்க, அதை விரைவில் காட்டுக்குள் விட வேண்டும் என்றும் இணையவாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.