202205040815134408 Agni Star launches today SECVPF - 2026

தமிழகத்தில் துவங்கியது அக்னி நட்சத்திரம்…

சற்றுமுன்

இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதுமே வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த நிலையில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது.காலை 9மணிக்கே பல இடங்களில் வெயில் அதிக உஷ்ணத்துடன் வாட்டி எடுத்தது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21-ந் தேதி முதல் வைகாசி மாதம் 14-ந் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலம் இதனை அக்னி நட்சத்திர கத்தரி வெயில் காலம் என்று கூறுகிறார்கள்.
இந்த காலம் வடகிழக்கு பருவமழை காலத்திற்கும், தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். பஞ்சாங்கத்தின் படி, 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கத்தைவிட இந்த நாட்களில், சூரியன் அதிக வெப்பத்தை கொடுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். இந்த காலப்பகுதியை கத்திரி வெயில் என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்று அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் வருகிற 28-ந் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால், தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தமிழக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தபோது மக்கள் அதிகம் தண்ணீர் குடிக்கவேண்டும். பைக் சீட் களில் ஆம்ளேட் போடுமளவுக்கு வெயில் வாட்டி எடுப்பதால் பைக் சீட்களை துணியால் மூடிவைக்க கேட்டுக் கொண்டார்.

202205040815134408 Agni Star launches today SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.