சிவகாசியில் இன்று பட்டாசு தொழிலாளி கொலை..

Published:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையம் அருகே இன்று பட்டாசு தொழிலாளி கொலைசெய்யப்பட்டார். உடலை கைப்பற்றி இரண்டு திருநங்கைகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பேருந்து நிலையம் அருகே பிள்ளைகுழி பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக நகர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்-

காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது திருத்தங்கல் தேவராஜ் காலனி பகுதியை சேர்ந்த டேவிட் (38) என்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட இவருக்கு கல்பனா என்ற மனைவியும் சுபா என்ற 10 வயது மகளும் உள்ளனர் – சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும்
கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் – பட்டாசு தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து இரண்டு திருநங்கைகள் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
images 2 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img