images 21 1 - 2026

ஊட்டியில் 17வது ரோஜா கண்காட்சி..

சற்றுமுன்

ஊட்டியில் பிரபலமான அரசு ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி இன்றுதுவங்கியது.ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்தனர்.
அரசு ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சியில் ரோஜா மலர்கள் மூலம் வீடு, பியானோ, பொம்மைகள் வடிவமைப்பு போன்றவை இடம்பெற்றன.

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி மற்றும் பழ கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த வாரம் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் பல வாசனை திரவிய பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் இன்று 17வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அம்ரித், அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்ர்வையிட்டனர்.

images 21 1 - 2026
images 20 1 - 2026
ooty flower exhibition 16525154933x2 1 - 2026
images 17 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.