Thirupathi - 2026

திருப்பதி: பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சற்றுமுன் அடடே... அப்படியா? ஆலயங்கள் இந்தியா
Thirupathi - 2026

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

இருப்பினும் குறைந்த அளவு பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களை விஐபி பிரேக் தரிசனம் நிறுத்தப்பட்டு இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற ஜூலை மாதம் 15ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் அஷ்டதள பாத பத்மராதனை, திருப்பாவாடை சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விஐபி பிரேக் தரிசனம் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதனால் அதிகமான சாமானிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் திருப்பதிக்கு வந்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

அலிபிரியில் இருக்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், திருப்பதியில் உள்ள சீனிவாச தங்கும் விடுதி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 2வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து கோடை வெயிலை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், மோர், சிற்றுண்டி, உணவு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோடை வெயிலுக்கு மாடவீதிகளில் வெயில் தாக்கம் தெரியாமல் இருப்பதற்காக வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.