காணமல் போன குட்டி.. கண்ட தாயின் கண்களில் What a Expression.!

Published:

sloth - 2026

பல வித வினோத வீடியோக்கள் வைரல் ஆகின்றன. அதிலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகின்றன.

பாசப்பிணைப்பையும் உதவியின் வலிமையையும் காட்டும் ஒரு சுவாரசியமான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பூமியில் உள்ள மிக மெதுவான மற்றும் அழகான விலங்குகளில் ஒன்றான ஸ்லாத் (sloth) எனப்படும் விலங்கின் வீடியோ இது. இந்த விலங்கை பலர் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள்.

தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் விலங்கு இது. நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிகவும் மெதுவாகவே நகரும் என்பதாலும் இதை “அசையா” கரடி என்றும் அழைக்கிறார்கள்.

ஸ்லாத், தனது குழந்தையுடன் மீண்டும் இணையும் மனதைக் கவரும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி இன்று உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும். இந்த வீடியோவை ஜாகுக்வார் மீட்பு மையம் வெளியிட்டுள்ளது.

ஜாகுவார் மீட்பு மையம், வன விலங்குகளை மீட்பது, விடுவிப்பது மற்றும் மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பது என பல பணிகளை செய்துவரும் அமைப்பு. இந்த அமைப்பு, தங்கள் அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இந்த வீடியோவை நெட்டிசன்கள் மற்ற தளங்களிலும் மறுபகிர்வு செய்து வருகின்றனர். அன்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ பல சமூக ஊடகங்களிலும் வைரலாகிறது.

தாய் ஸ்லாத், மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒருவர், அதன் குழந்தையைக் கொண்டு வந்து அருகில் காட்டும்போது, குட்டியை அடையாளம் கண்டு கொள்கிறது தாய்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 81 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் உணர்ச்சிவசப்பட்டு கமெண்டுகளை பதிவிட்டிருக்கின்றனர்.

ஜாகுவார் மீட்பு மையம் அவர்களின் பதிவில், “இந்த தாயையும் குழந்தையையும் மீண்டும் இணைக்க முடிந்தது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மே 10 ஆம் தேதி, ஊழியர்களில் ஒருவர் குழந்தை கடற்கரைக்கு அருகில் தரையில் அழுவதைக் கண்டார். அம்மா மரத்தில் இருந்தது, ஆனால் அது மர உச்சிக்கு சென்று கொண்டிருந்தது. எனவே, குட்டி ஸ்லாத்தை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்து, அதன் ஆரோக்கியத்தை உறுதி செய்துக் கொண்டோம்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அதன்பிறகு குழந்தையின் அழுகையைப் பதிவுசெய்து, அம்மாவின் கவனத்தை ஈர்க்க மரத்தின் அருகே சென்று விளையாடினோம், அம்மா குழந்தைக்காக வரும் வரை நாங்கள் பொறுமையாகக் காத்திருந்தோம். இறுதியில் அம்மாவிடம் சேர்த்துவிட்டோம்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

“சில ஆண்டுகளுக்கு முன்பு JRC இந்த முறையை உருவாக்கியது, அம்மா மற்றும் குட்டி ஸ்லாத்களை மீண்டும் இணைக்க ஒவ்வொரு முறையும் இதேபோன்ற வழிமுறையை பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொரு முறையும் ஒரு தாயும் அவளுடைய குழந்தையும் மீண்டும் இணைவதைக் காணும் போது அது எங்கள் இதயத்தை உருக்குகிறது, “என்று விலங்குகள் நல அமைப்பின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img