electronic skin - 2026

வலியை உணரும் எலக்ட்ரானிக் தோல்.. இந்திய வம்சாவளி பேராசிரியர் குழு சாதனை!

சற்றுமுன் அடடே... அப்படியா? உலகம்
electronic skin - 2026

வலியை உணரக் கூடிய எலக்ட்ரானிக் தோலை இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் குழுவினர் உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் ரவீந்தர் எஸ் தஹியா. இவர் அங்குள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட் பொறியியல் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது இவரது தலைமையிலான பொறியாளர்கள் குழு வலியை உணரக் கூடிய எலக்ட்ரானிக் தோலை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது.

இதுபற்றி ராகவேந்திரா பேசும்போது, இந்த கண்டுபிடிப்பு மனிதனைப் போன்ற உணர்திறன் கொண்ட புதிய தலைமுறை ஸ்மார்ட் ரோபோக்களை உருவாக்க உதவுகின்றது.

மூளையிலிருந்து வரும் சமிஞ்சைகளை பதிலளிக்கக் கூடிய பெரிய அளவிலான மின் துறை உருவாக்குவதற்கு இது முன்மாதிரியாக இருக்கும்.

ravindar - 2026

மேலும் வலி போன்ற எதிர்பாராத தூண்டுதல்களுக்கு நாம் அனைவரும் நம் வாழ்வின் ஆரம்பத்திலேயே பழகிக் கொள்கிறோம். எலக்ட்ரானிக் இந்த புதிய வடிவத்தின் வளர்ச்சி உண்மையில் நமக்கு தெரிந்த அளவிற்கு வலியை ஏற்படுத்தாது.

ஆனால் இது வெளிப்புற தூண்டுதலில் இருந்து கற்றல் செயல்முறையை விளக்குவதற்காக சுருக்கமாக வழியாக இது கருதப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.