அதிமுக தலைமை அலுவலக சாவி வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை ?!..

Published:

Screenshot 2022 07 21 112929 - 2026

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது . நேற்று அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு வந்த நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு உட்பட அதிமுக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அலுவலக சாவி வழக்கு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஈபிஎஸ்., ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் . அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் அப்பீல் மனுவை விசாரிக்கும்போது தமது தரப்பையும் கேட்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.

இதனைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி முன்பு ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் முறையிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி ரமணா, இந்த வழக்கை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு முன்பாக பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார். அதன்படி, அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் அதிமுக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img