875885 cannabis 1 - 2026

கேரளாவில் சமையலையில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது..

சற்றுமுன்
875885 cannabis 1 - 2026

கேரளாவில் வீட்டு சமையலையில் கஞ்சா செடி வளர்த்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருக்காக்கரையிலுள்ள அஜந்தா அடுக்குமாடி குடியிருப்பில், கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அக்குடியிருப்பில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது பி 3 என்ற குடியிருப்பில், அபர்ணா ரெஜி என்ற பெண்ணும், அவரது உறவினரான ஆலன் ராஜூவும் சமையலறையில், தொட்டியில் வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்ததை கண்டுபிடித்தனர்.

சுமார் 1 1/2 அடி உயரமுள்ள கஞ்சா செடியை அங்கிருந்து போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் இருவரும் என்ஜினியர் எனவும் கடந்த 8 மாதங்களாக அக்குடியிருப்பில் தங்கியிருப்பதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கஞ்சா செடிக்காகவே அவர்கள் தங்களது சமையலறையில் பிரத்தியேகமாக எல்.ஈ.டி விளக்குகளும், எக்ஸாஸ்ட் பேனும் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.