
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவினை வழக்கம்போல் நடத்தக்கோரி நெல்லையப்பர் திருக்கோவில் செயல் அலுவலர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்….
காவல் உதவி ஆணையாளர் சதீஷ் குமார் டவுன் காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி திருக்கோவில் செயல் அலுவலர் ராமராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்… மேல் அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் பேசி இன்று மாலைக்குள் நல்ல முடிவு எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார் … மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் மாவட்டச் செயலாளர் சிவா , சுடலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜசெல்வம், நமச்சிவாயம் சங்கர், கிருஷ்ணமூர்த்தி , கார்த்திக் , அருள்ராஜ் , விமல், நாராயணன் பக்தர் பேரவை ராஜகோபால், உட்பட பலர் கலந்து கொண்டனர்
இன்று இரவுக்குள் திருவிழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் முன் எடுக்காவிட்டால் நாளை காலை நூற்றுக்கணக்கான பக்தர்களைத் திரட்டி திருக்கோவிலுக்கு உள்ளிருப்புப் போராட்டம் நடத்த, போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்
செய்தி வீடியோ