
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக அவலம்
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலய மேல சித்திரவிதியில், கோயில் முன்பாக பல நாட்களாக கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையில் குளம் போல தேங்கியுள்ளன. இத்திருக்கோவிலுக்கு, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் .
இப்படி புகழ்பெற்ற ஆலயத்தின் வாசலில் கழிவு நேரானது சாலைகளை பெருக்கெடுத்து ஓடுகிறது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தும், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வில்லையாம் . மேலும், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையானது, இது குறித்து மாநகராட்சி அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்று, கோவில் வாசலில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரை தடுத்து நிறுத்த ஒரே நடவடிக்கை எடுக்க பக்தர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை அருகே வீட்டில் டியூப்லைட் ரிப்பேர் செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்
மதுரை அருகே வீட்டில் டியூப் லைட்டை ரிப்பேர் செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியாளர்
மதுரை அருகே சிலைமான் அண்ணாநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கவேலு மகன் சிவராஜ் 23. இவர் பனையூர் டைமன் சிட்டியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தார் . அங்கு பழுதான டியூப் லைட்டை சரி செய்ய முயன்றார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அவருடைய தந்தை தங்கவேலு சிலைமான் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் சிவராஜ் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகனா குளத்தில் குடும்ப பிரச்னையில் தந்தை மகன் மீது தாக்குதல்: உறவினர் கைது!
நாகனாகுளத்தில் குடும்ப பிரச்சினையில் தந்தை மகனை தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
நாகனாகுளம் ராமகிருஷ்ணன் மகன் ஆனந்த் 29. அதே பகுதியைச் சேர்ந்தவர் உறவினர் சசிகுமார் 41. இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் ஆனந்தின் மகனை சசிகுமார் அவருடைய சகோதரர் அடைக்கலம் உறவினர் பிரபு, சின்ன அடைக்கலம் ஆகாஷ் ,ஆகிய ஐந்து பேரும் தாக்கியுள்ளனர். இதை ஆனந்த் தட்டி கேட்டார் .இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அவரையும் ஆபாசமாக பேசி தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆனந்த் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து உறவினர் சசிகுமாரை கைது செய்தனர்.
தெப்பக்குளம் அருகே காரை ஓட்டிச் சென்ற போது நெஞ்சுவலி; டிரைவர் மரணம்!
மதுரை தெப்பக்குளம் அருகே கார் ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
புதுக்கோட்டை சார்லஸ்நகர் வெங்கடபிடாரி கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பழனி 38 .இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .சம்பவத்தன்று தெப்பக்குளம் அருகே கார் ஓட்டிச் சென்றபோது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.இதனால் ஓடிக்கொண்டிருந்த கார் சற்று தூரத்தில் தானாக நின்றது. இதைத்தொடர்ந்து காரில் சென்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி அர்ச்சனா தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் பழனியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலஅனுப்பானடியில் கணவன் மனைவி தற்கொலை முயற்சி! கணவன் மரணம், மனைவிக்கு தீவிர சிகிச்சை!
மதுரை மேலஅனுப்பானடியில் கணவனும் மனைவியும் தற்காலைக்கு முயன்ற நிலையில் கணவர் உயிர் இழந்தார். மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேல அனுப்பானடி வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஜனார்த்தனன் 68.குடும்பப்பிரச்சினை காரணமாக இவருடைய மனைவி சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய நிலையில் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனால் மனமுடைந்த கணவர் ஜனார்த்தனன்வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மகன் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரில் கீரைத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் ஜனார்த்தனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டைவிட்டு வெளியே சென்றவர் பிணமாக மீட்பு: போலீசார் விசாரணை
மதுரை எஸ் கொடிக்குளத்தில் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதிகாலை கன்மாயில் பிணமாக மீட்பு காரணம் என்ன போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. .
மதுரை டிச28 எஸ் கொடிக்குளத்தில் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதிகாலையில் கன்மாயில் பணமாக மீட்கப்பட்டார்.
எஸ்.கொடிக்குளம் பாரத் நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் மாயாண்டி 40. இவர் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அதிகாலையில் கொடிக்குளம் கண்மாயில் பணமாக மிதந்தார்.இந்த தகவல் அறிந்த கே.புதூர் போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இது சம்பந்தமாக அவருடைய மனைவி ஜெயராணி கொடுத்த புகாரில் கே.புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.