பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா நலம்…

Published:

1813640 ben1 - 2026

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்தி நகரில் வசித்து வரும் தனது தாயார் ஹீரா பென்னைச் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார். குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img