சுஷாந்தை பின் தொடர்ந்து பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை!

Published:

marati actor 3 - 2026

மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 32.

பகார், இச்சார் தர்லா பக்கா போன்ற மராத்தி படங்களில் நடித்தவர் பாக்ரே. பிரபல மராத்தி நடிகை மயூரி தேஷ்முக்கைத் திருமணம் செய்துகொண்டார்.

marati actor 1 - 2026

அசுதோஷின் மனைவி மயூரி தேஷ்முக்கும், பிரபல மராத்தி நடிகை ஆவார். சில படங்களில் நடித்துள்ள இவர், டிவி தொடரில் நடித்து வருகிறார். மேடை நாடகங்களில் நடித்துள்ளார் மஹாராஷ்டிராவில் உள்ள நந்தத் பகுதியில் வசித்து வந்தார்.

marati actor - 2026

இந்நிலையில் பாக்ரே  கணேஷ் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் நேற்று தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.அவருடைய பெற்றோர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் பாக்ரேவின் உடலைப் பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பினார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

marati actor 2 - 2026

அசுதோஷ் பாக்ரே, தன்னுடைய சமூகவலைத்தளத்தில் ஒரு மனிதன் ஏன் தற்கொலை செய்துகொள்கிறான் என ஒரு விடியோவைச் சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அசுதோஷின் தற்கொலைச் சம்பவம் மராத்தித் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img