ஏப்ரல் 21, 2021, 9:40 காலை புதன்கிழமை
More

  விலை உயர்ந்த பொருளை வைத்து இருப்பதால் விளையும் சங்கடம்: ஆச்சார்யாள் அருளமுதம்!

  abinav vidhya theerthar

  பைராகி ஊர் ஊராக சஞ்சரித்துக் கொண்டிருந்தார் ஒவ்வொரு இடத்தையும் சென்றடைந்ததும் தீயை மூட்டி அதன் அருகில் அமர்ந்து தியானம் பழகி வந்தார்

  தான் எங்கு சென்றாலும் சிஷ்யனை பார்த்து இந்த இடத்தில் பயப்படுவதற்கான காரணம் உள்ளதா என்று கேள்வி கேட்பார் . சிஷ்யனும் இல்லை என்பான்.

  தான் போகும் இடங்கள் எல்லாம் பயத்தைப் பற்றியே கேட்டுக் கொண்டிருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டான் சிஷ்யன். ஒருநாள் அவர் கையிலுள்ள கெண்டியை எடுத்து பார்த்தான் அதிலிருந்து கடகடவென்று ஓசை எழும்புவதைக ஒருநாள் கவனித்தான்

  தண்ணீர் மட்டுமே இருக்க வேண்டிய இதில் உருண்டோடும் பொருள் ஏதோ இருக்கிறதே என்று யோசித்து அவன் கமண்டலத்தின் உள்ளே கையை விட்டு பார்த்தான் அவன் கையில் சிறிய துணிப் பை கிடைத்தது

  இதுதான் என் குருவின் பயத்திற்கு காரணமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதை வெளியில் தூக்கி எறிந்தான். பைராகி அங்கிருந்து புறப்பட்டு அடுத்த ஊரை சென்றடைந்ததும் வழக்கம் போல இங்கே ஏதாவது பயம் உள்ளதா என்று கேட்டார்.

  அது நம்மை விட்டுச் சென்று விட்டது என்று கூறினான் சிஷ்யன். என்ன சொல்கிறாய் என்று கேட்டார் குரு. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை அது நதிக்குள் சென்றுவிட்டது என்று சொன்னான். என்ன நதியில் விழுந்து விட்டதா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

  நான் உங்களுடைய கமண்டலத்தை சோதித்துப் பார்த்தேன் அதில் ஒரு சிறிய பொட்டலம் இருந்தது அதை எடுத்து நதியில் வீசி எறிந்து விட்டேன் பயத்திற்கு காரணமான அதனை உங்களுடன் வைத்துக் கொண்டிருப்பதால் என்ன பிரயோஜனம் அத்தகைய பொருளை வைத்துக் கொண்டு நமக்கு ஆக வேண்டியது என்ன இருக்கிறது பயத்தை உண்டு பண்ணும் பொருள் எதுவும் நம்மிடம் இருக்க வேண்டாம் என்று எண்ணித்தான் அதை வீசி எறிந்து விட்டேன் என்று கூறினான்.

  அந்தத் துணிப் பையில் விலை உயர்ந்த முத்து இருந்தது எவனாவது திருடிக்கொண்டு விடுவானோ என்ற அச்சம்தான் வராகியை தொடர்ந்து இருந்தது அதனால் போகும் இடங்கள் எல்லாம் பாதுகாப்பானது தானா என்று கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார்

  சிஷ்யன் செய்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பைராகி அவனுடைய புத்திசாலித்தனத்தை பாராட்டினார் அவர் எவ்வித பயமின்றி சுதந்திரமாக அதன்பின் சஞ்சாரம் செய்தார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »