ஏழாவது திருமணம் செய்ய வந்த மோசடி மணப்பெண் கைது..

பரமத்தி வேலூர் அருகே ஆறாவது திருமணம் முடிந்த, 15 நாட்களுக்குள் ஏழாவது திருமணம் செய்ய வந்த மோசடி மணப்பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தனபால், 35. இவருக்கும், மதுரையைச் சேர்ந்த சந்தியா, 26, என்பவருக்கும், கடந்த, 7ல் திருமணம் நடந்தது. திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், 45, என்ற புரோக்கர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா, மாமா ஆகிய இருவர் மட்டும் வந்துள்ளனர். அவர்களும், புரோக்கரும் திருமணம் முடிந்த கையோடு, 1.50 லட்சம் ரூபாய் கமிஷன் வாங்கிச்சென்றனர். தனபால், சந்தியாவுடன் புது வாழ்க்கையை துவங்கினார்

இந்நிலையில், 9ம் தேதி காலை, தனபால் எழுந்து பார்த்த போது, சந்தியாவை காணவில்லை. அவரது மொபைல்போன், ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. அவரது உறவினர்கள், புரோக்கர் பாலமுருகன் மொபைல் போன்களும், ‘ஆப்’ செய்யப்பட்டிருந்தன. வீட்டில் பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகள், தான் கொண்டு வந்த துணிகளை எடுத்துக் கொண்டு சந்தியா மாயமானது தெரிய வந்தது. இதுகுறித்து, தனபால் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தபோது, மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி, 45, என்ற புரோக்கர் மூலம், சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. அதைப்பார்த்த தனபால், தன்னை ஏமாற்றியவர்களை வளைக்க திட்டமிட்டார். இதையடுத்து, புரோக்கர் தனலட்சுமியிடம் உறவினர்கள் மூலம், வேறு நபருக்கு திருமணம் செய்ய பேசி உள்ளார். போட்டோக்களை மட்டும் பார்த்து, போனிலேயே திருமணம் நிச்சயம் செய்து, நேற்று காலை, திருச்செங்கோட்டில் திருமணம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மணப்பெண் சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அவரது உறவினர் அய்யப்பன், 37, ஆகியோர் காரில் திருச்செங்கோடு வந்தனர். காரை ஜெயவேல், 38, என்பவர் ஓட்டி வந்துள்ளார். அனைவரும் மதுரையைச் சேர்ந்தவர்கள்.அங்கு வந்த போது, கணவர் தனபால், அவரது உறவினர்கள் இருப்பதைக் கண்டு சந்தியா அதிர்ச்சி அடைந்தார். சந்தியாவையும், அவருடன் வந்தவர்களையும் பிடித்து, பரமத்தி வேலுார் போலீசில் தனபால் உறவினர்கள் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சந்தியாவுக்கு தனபாலுடன் சேர்த்து, இதுவரை ஆறு பேருடன் திருமணம் நடந்தது தெரிய வந்தது.
சந்தியா, அவரது கூட்டாளிகள், யாரையாவது திருமணம் செய்து, இரண்டு நாட்கள் மட்டும் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்ததையும், புரோக்கர் கமிஷனையும் பெற்று கம்பி நீட்டுவதை தொழிலாக கொண்டவர்கள் என்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, அய்யப்பன், ஜெயவேல் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். ஆறாவது திருமணம் செய்த, 15 நாட்களுக்குள், ஏழாவது திருமணம் செய்து மோசடியில் ஈடுபட வந்த பெண்ணின் ‘துணிச்சலை’ பார்த்து போலீசாரே அதிர்ந்து போயினர்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!
IMG 20220923 112208 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories