குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு – 56.88% வாக்குப்பதிவு..

Published:

908564 - 2026

குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. நடந்து முடிந்த  குஜராத் சட்டசபை முதல் கட்ட  தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 56.88% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் அமைதியான முறையில் முதற் கட்ட வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றது. ஆமதாபாத், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.காலை எட்டு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை ஐந்து மணி வரை நடைபெற்றது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. இந்தநிலையில், காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே மக்கள் ஆர்வமாக வந்து தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் முடிவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் இன்று தேர்ந்தல் நடந்த நிலையில் அதிகபட்சமாக தபி மாவட்டத்தில் 72.32% வாக்குகள் பதிவாகி உள்ளன.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. நடந்து முடிந்த  குஜராத் சட்டசபை முதல் கட்ட  தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 56.88% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.48% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தபியில் 63.98% வாக்குகள் பதிவாகியுள்ள்ளதாக தெரிவித்துள்ளது.

குஜராத் தேர்தல் திருவிழா: ஒன்றாக சேர்ந்து வாக்களித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 81 பேர்! குஜராத்தில் முதற் கட்டமாக இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒன்றாக சேர்ந்து வாக்களிக்க ஒரே குடும்பத்தை சேர்ந்த 81 பேர் வாக்களித்தனர். இதில் 60 பேர் மட்டுமே வாக்களிக்கும் வயதை எட்டி உள்ளனர். மொத்தம் 96 பேர் கொண்ட இந்த குடும்பத்தில் 15 பேர் கிராமத்தில் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- 2026
ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img