ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் நாளை ஆரன்முளா கோயிலில் புறப்பாடு..

Published:

FB IMG 1671689726377 - 2026
images 23 2 - 2026

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் நாளை 23-ந் தேதி ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்படுகிறது

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

இதற்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இம்முறை கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

குறிப்பாக வார இறுதி நாட்களில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் தரிசனத்திற்கு வருகிறார்கள். இன்று கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோவிலுக்கு இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18-ம் படி ஏற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த வரிசை கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்தது. இதுபோல நெய்யபிஷேகம் செய்யவும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

இம்முறை ஏராளமான கன்னிசாமிகளும் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் சரங்குத்தியில் திரண்டதால் அங்கும் கூட்டம் அலை மோதியது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

சபரிமலை ஐயப்பனுக்கு இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

அதன்பின்பு பகல் 11 மணிக்கு களபாபிஷேகத்திற்கு பிறகு தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் மண்டல பூஜை நடக்கிறது. இப்பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன்பின்பு மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக சபரிமலை சன்னிதானம் எடுத்து செல்லப்படும். அலங்கரிக்கப்பட்ட சபரிமலை கோயில் போல் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் கொண்டு செல்லப்படும் தங்க அங்கி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

இந்த ஊர்வலம் வருகிற 23-ந் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலம் 26-ந் தேதி பம்மை கணபதி கோவிலை வந்தடையும். பின்னர் அங்கிருந்து அன்று மாலை சன்னிதானம் கொண்டு செல்லப்படும். மறுநாள் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையின் போது தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

சபரிமலை ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 பவுன் எடையிலான தங்க அங்கி பத்தனம்திட்டை மாவட்டம், ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 27ஆம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளதால் தங்க அங்கி , அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஊர்வலம் நாளை காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆரன்முளா ஸ்ரீ பார்த்த சாரதி கோவிலில் இருந்து புறப்பட உள்ளது.

தங்க அங்கி ஊர்வலத்திற்கு இந்த ஆண்டு, வழி நெடுகிலும் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள்.

images 22 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img