ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் இன்று பறிமுதல்..

Published:

gold kidnap jpg - 2026

ராமேஸ்வரம் கடலில் கடத்தல் காரர்களால் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து கடத்தல் காரர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் வழி கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்ற நிலையில், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக மண்டபத்துக்கு படகில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு செவ்வாய் கிழமை ரகசிய தகவல் வந்தது. அதை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் மண்டபம் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து செவ்வாய் கிழமை நள்ளிரவில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு ரோந்து கப்பலில் விரைந்து சென்றனர்.

இந்திய கடலோர காவல் படை கப்பலை கண்டதும், படகு ஒன்றில் இருந்தவர்கள், திடீரென சில பொருட்களை கடலில் தூக்கி வீசி தப்பியுள்ளனர் இதையடுத்து கடலோர காவல் படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த 3 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த பொருளைத்தான் கடலில் வீசியது தெரியவந்தது. அவை தங்கக்கட்டிகளாக இருக்கலாம் என்றும் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது இதைதொடர்ந்து இந்திய கடலோர காவல் படையின் ஸ்க்யூபா டைவிங் கடல் மூழ்கு நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் மூலம் கடலில் வீசப்பட்ட அந்த பொருட்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட கடத்தல் தங்கத்தை இந்திய கடற்படையினர் மீட்டனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

மீட்கப்பட்ட கடத்தல் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.7.5 கோடி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தங்கம் எப்படி பிடிபட்டதுமண்டபத்தில் இருந்து கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினரும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினரும் கடத்தல்க்காரர்களை  அழைத்துக்கொண்டு நடுக்கடலுக்கு புறப்பட்டுள்ளனர். தங்கத்தை வீசியதாக கூறப்பட்ட இடத்தை கைதானவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகளை, கடலோர காவல் படை துரத்தியதால் அதை கடலில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வீசிவிட்டதாகவும், தங்கம் வீசப்பட்ட கடல் பகுதியை ஜி.பி.எஸ். கருவியின் உதவியுடன் அடையாளம் காணும் வகையில் அந்த இடத்தை பதிந்து வைத்திருப்பதாகவும் கடத்தல்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

தயார்நிலையில் இருந்த இந்திய கடலோர காவல்படை வீரர்கள் 3 பேர், கடலில் குதித்து 5 பார்சல்களை எடுத்து வந்தனர். அந்த பார்சல்கள் கருப்பு நிறத்தில் இருந்தன. அவற்றின் உள்ளே ஏராளமான தங்கக்கட்டிகள் இருந்தன.நகை மதிப்பீட்டாளர் வரவழைக்கப்பட்டு எடை போட்டு மதிப்பிடப்பட்டதில் மொத்தம் 15 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி என்று கூறப்படுகிறது.கடந்த 5 வருடத்துக்கு பிறகு இவ்வளவு அதிகமான கடத்தல் தங்கம் ராமேசுவரம் பகுதியில் பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். அதனை கடத்தி வந்த ஆசிக், பாரூக் ஆகிய 2 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img