auto - 2026

சத்தீஸ்கர் -ஆட்டோ மீது லாரி மோதி விபத்து- 7 பள்ளி குழந்தைகள் பலி..

சற்றுமுன்
auto - 2026

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று ஆட்டோ மீது லாரி மோதி விபத்து- 7 பள்ளி குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து பற்றி கேள்விப்பட்டதும் முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் இன்று பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது லாரி மோதியது. கோரர் சில்காத்தி சவுக் என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில், ஆட்டோ தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது.

ஆட்டோவில் பயணித்த குழந்தைகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் முதல்வர் பூபேஷ் பாகல் தனது இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறை மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.