images 2023 02 09T203732.491 - 2026

செங்கோட்டை பார்டர் பிரபல புரோட்டாக் கடை குடோனுக்கு சீல்

உள்ளூர் செய்திகள் நெல்லை
images 2023 02 09T203732.491 - 2026

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை பார்டரில் இயங்கி வரும் மிகப் பிரபலமான  புரோட்டாக் கடைக்குச் சொந்தமான குடோனுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த உத்தரவு வரும் வரை, குடோனைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை பார்டரில் இயங்கி வரும் புரோட்டக் கடை பிரபலமானது. குற்றாலம் அருவியில் குளித்து மகிழ வரும் அசைவப் பிரியர்கள் அடுத்து நாடுவது பிரானூரில் செயல்பட்டு வரும் புரோட்டக் கடையைத்தான்.

இந்த நிலையில், பிரானூரில் இயங்கி வரும் புரோட்டாக் கடையில் கலப்பட மற்றும் கெட்டுப்போன உணவுகளைக் கொண்டு சமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன்.

இது குறித்து சோதனை செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று சமையல் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்குச் சென்றனர். ஆனால், குடோனை சோதனை செய்வதுற்கு உரிமையாளர் அனுமதி மத்து, குடோனை திறக்கமுடியாது என்று கூறிவிட்டதால், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்து சென்றுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.