images 2022 07 25T214547.393 1 - 2026

சிவகாசியில் இருவர் கொலை- ஒருவர் கைது 

சற்றுமுன்
images 2022 07 25T214547.393 1 - 2026

சிவகாசியில் வேலை தொடர்பான தகராறு ஏற்பட்டு இரட்டைக் கொலையில் முடிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையில் ஈடுபட்ட துப்பறவு தொழிலாளியை போலீசார் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

sivakasi - 2026
கொலை செய்யப்பட்ட இருவர்

சிவகாசி ஸ்டேட் வங்கி காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்து மனைவி முருகேஸ்வரி வயது 52. இவரது கணவர் இறந்துவிட்டார். ஆயில் மில் காலனி முனியப்பன் மனைவி தமயந்தி என்ற கருப்பாயி வயது 61. முனியப்பன் இறந்துவிட்டார்.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் காளிராஜன்(39) தனது தங்கை ரதி லட்சுமிக்கு வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது குறித்து பேசுவதற்கு முருகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது முருகேஸ்வரி வீட்டில் கருப்பாயும் இருந்துள்ளார். தொடர்ந்து முருகேஸ்வரியும், கருப்பாயும் சில ஆண்டுகள் கழித்து ராகுலுக்கு வேலை வாங்கிக் கொடுத்த விடலாம் எனக் கூறியதையடுத்து மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து முருகேஸ்வரி, கருப்பாயி ஆகியோரை காளிராஜன் குத்தியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காளிராஜன் திருத்தங்கல் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து காளி ராஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் சிவாகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர்
சீனிவாசபெருமாள் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.