IMG 20230226 WA0032 - 2026

லாரி மோதி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் 5 பேர் பலி..

சற்றுமுன் கோவை
IMG 20230226 WA0032 - 2026

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் அருகே லாரி மோதி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குடும்பத்துடன் கொடுமுடியில் திதி கொடுத்து விட்டு சரக்கு வேனில் 30க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வாலிபனங்காடு பகுதியில் லாரி மோதி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்துடன் கொடுமுடியில் திதி கொடுத்து விட்டு வீடு திரும்பியபோது விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.