பிஎஃப்ஐ.,க்கு ஆதரவாக பேட்டி: பாஜக., துணைத் தலைவருக்கு இந்து முன்னணி கண்டனம்!

Published:

hindumunnani - 2026

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே – பாஜக துணைத் தலைவர் அவர்களின் செயல் தவறானது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்…. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…..

2047இல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்றும் அதற்கு தடையாக இருக்கும் இந்து தலைவர்களை eliminate செய்யும் சதித் திட்டத்துடன் செயல்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பொறுப்பாளர்களாக இருந்த இரண்டு வழக்கறிஞர்களை
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரையில் கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் என்ற அந்த இரண்டு வக்கீல்களும் இஸ்லாமிய குற்றவாளிகளுக்கு அவர்களது வழக்கில் ஆஜரானார்கள் என்பதற்காக கைது செய்யப்பட்டது போல் ஒரு தவறான பொய் பிரச்சாரத்தை முன்வைத்து சென்னையில் ஒரு சில வழக்கறிஞர்களின் ஏற்பாட்டில் நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார்கள்.

அந்த முகமது யூசுப் மற்றும் முகமது அப்பாஸ் ஆகிய இருவரும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் மாநில பொறுப்பாளர்களாக இருந்து செயல்பட்டவர்கள். அந்த அமைப்பின் சதி திட்டங்களில் அவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி தான் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களை கைது செய்து இருக்கிறார்கள்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராக இருக்கும் வழக்கறிஞர் திரு. பால் கனகராஜ் அவர்கள் அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் ஏதோ அந்த இரண்டு வக்கீல்களும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கைது செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரானதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு பொய்யான தகவலுடன் பேட்டியளித்து இருக்கிறார்.

2047 ஆம் ஆண்டு இந்தியாவை இஸ்லாமிய நாடாக அறிவிப்போம் என்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் (PFI) இந்தியா அமைப்பின் சதித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த இரண்டு வக்கீல்களும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் தான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் திரு. பால் கனகராஜ் அவர்களின் பேட்டி பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தும் விதமாக இருக்கிறது.

இந்திய தேசியத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாக சதி செயல்களில் ஈடுபட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்த பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் திரு. பால்கனகராஜ் அவர்களின் செயலினை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img